முந்தைய நமது ”(தபால்) தலை சிறந்த சில” என்ற தலைப்பில் வழங்கிய தபால் தலைகள் படத் தொகுப்பில் சில பிரபல தலைகள் விடுபட்டிருப்பதாக சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். “நல்ல தொகுப்பு. அறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை கிடைக்கவில்லையா?” “நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் அஞ்சல் தலை என் நண்பரிடம் இருக்கிறது. அதை இந்தத் தொகுப்பில் எப்படி சேர்ப்பது.” என சிலர் கேட்டிருந்தார்கள். இதையெல்லாம் படித்தாரோ என்னவோ யாரோ ஒரு நண்பர் அங்கே விடுபட்டிருந்த சில அஞ்சல் தலைகளையெல்லாம் தொகுத்து இங்கே நமக்கு அனுப்பியிருந்தார். அந்த நண்பருக்கு நம் நன்றிகள்.
படத்தை சொடுக்கி பெரிதுபடுத்தி பார்க்கலாம்.
நேற்றைய பொழுதும் நிஜமில்லைநாளைய பொழுதும் நிச்சயமில்லை இன்றைக்கு மட்டுமே நம் கையில் |
வான்மீகரும் தமிழும் மென்புத்தகம் Valmiki and Tamil pdf ebook Download. Click and Save.Download

நேற்றைய பொழுதும் நிஜமில்லை
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைவதைப் போல ஆட்டைத் தோளில் போட்டுக் கொண்டே அதை தேடுவது போல சில சமயங்களில் நாமும் சில விசயங்களை கையில் வைத்துக்கொண்டே வேறெங்கெங்கோ அவைகளை தேடிக்கொண்டிருப்போம். அப்படி ஒரு சில்லி விசயம் தான் நான் இங்கு சொல்ல வருவதும். வலையிலிருந்து இறக்கம் செய்த சில முக்கியமான வீடியோ படங்களை ஓட்டும் போது அல்லது நீங்களே உங்கள் கேம்கார்டர் வழி சூட்டிங் செய்த உங்கள் சில வீடியோ படங்களை கணிணியில் பார்க்கும் போது சில சமயம் அந்த வீடியோ படங்கள் தலைகீழாக ஓட நேரிடலாம். சில என்கோடர்கள் செய்த தவறினால் இவ்வாறு நேரிடும். அதற்கென்ன இது போன்ற தருணங்களில் அவைகளை தலை நிமிர்த்தி பார்க்க என்ன செய்வதாம். நண்பனைப்போல அவசரத்தில் லேப்டாப்பை சாய்த்துபோட்டு பார்க்கும் அதீத முயற்சியெல்லாம் வேண்டாம். கூகிளிலும் ஏதாவது மென்பொருள்கள் கிடைக்குமாவென தேடவேண்டாம். வீடியோக்களை இஷ்டப்படும் கோணத்திற்கு சாய்த்து கவிழ்த்து பார்க்கும் வசதி நம்மிடம் ஏற்கனவே இருக்கும் 


ஓங்கி ஒருவனை அறைந்தால் என்ன,
இந்த முறை சம்மர் படுவேகமாக போய்விட்டது. பாதி சம்மரை மழை ஆக்கிரமித்துக் கொள்ள இப்போது இலைவிழும் காலத்திலேயே கட்டிக்கம்பளிகளை உடுத்த வேண்டியிருக்கின்றது. குறுகிய சம்மரிலும் பீச்சாங்கரைகள் பல சுற்றி வந்தாயிற்று. இந்த முறை Orchard Beach, Oakland Beach, Cooper Beach, Sebago Beach என ஒரு ரவுண்ட் கட்டினோம். வழக்கமான பாயிண்ட் பிளசண்ட் பீச்சும் அட்லாண்டிக் சிட்டி பீச்சும் மிஸ்ஸிங். என் கனான் கேமராவால் சுற்றி சுற்றி சுட்டிறிக்கின்றேன். இந்தியா வந்திருந்தபோது குட்டிக் கொடைக்கானலெனச் சொல்லி கேரளாவை ஒட்டியிருக்கும் பொன்முடி மலைஸ்தலத்திற்கு கூட்டிப்போயிருந்தான் மனோஜ். ஏமாற்றமளிக்கவில்லை. நிறைய சினிமா படமெல்லாம் எடுத்திருக்கின்றார்களாம். தங்கமயிரென அதன் பேரை மாற்றி நேகாவை வெறுப்பேற்றினோம். அடிக்க வந்தாள். மலையாளத்தில் மயிரென்றால் அப்படி ஒரு கெட்டவார்த்தையாம். பொன்மொடி முகில்கள் சூழ்ந்த ஒரு அழகிய மலைப் பிரதேசம். இப்போதைக்கு இயற்கையாய் இருக்கின்றது. சீக்கிரத்தில் சிமெண்ட்ரோடு போட்டு, படிகள் அமைத்து, பிளாட்பாரம் கட்டி இந்த மலைஅழகியையும் கெடுத்துவிடுவார்கள். கிளிக்கியதில் எனது 5 மெகாபிக்சல் படங்களுக்கும் மனோஜின் புதிய 10 மெகாபிக்சல் படங்களுக்கு முள்ள வித்தியாசம் அப்பட்டமாய் கணிணியில் தெரிந்தது. எனது 5MP கனானை ஓரங் கட்டவேண்டும். படங்களை எடுத்த தேதியை பெயராக இட்டு ஃபோல்டர் படைத்து அவற்றை அடுக்குவது எனது பழக்கம். முன்பு Canon ZoomBrowser -எனும் மென்பொருளில் இந்த வசதி இருந்தது. அழகாக படங்கள் கிளிக்கிய நாட்கள் வாரியாக ஃபோல்டர்கள் படைத்து அவற்றை இறக்கம் செய்துவிடும். இப்போது விஸ்டாவின் Import Pictures வசதி இதை எளிமையாக்கி கொடுத்திருக்கின்றது. Tag these pictures-ல் Options-ஐ சொடுக்கி அதில் Folder name-ஆனது Date Taken+Tag ஆக இருக்குமாறு நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.














































ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
ரொம்ப நாளாகவே அந்த டிவிடி பிளயரை வாங்க வேண்டுமென கோபாலுக்கு ஆசை. போன வீக்கெண்டு வாங்கி வந்திருந்தான். Philips DVP5992. பெஸ்ட்பை- யில் 60 டாலருக்கு கிடைத்ததாம். போஸ்ட் ஆபீசில் கிடைக்கும் USPS movers coupon pack-யை நவிட்டி அதிலிருந்த கூப்பனால் 10% தள்ளுபடியில் வாங்கியிருக்கின்றான். ஆனாலும் அந்த விலை செலுத்த வேண்டி வந்தது. என்ன ஒரே நன்மை விற்பனை வரி கட்டாமல் வாங்கினது போல் இருந்ததாம். இந்த டிவிடி பிளயரில் இருக்கும் USB இண்டர்பேஸ் தான் அவன் பேவரைட். பார்க்க விரும்பும் வீடியோவை நொடியில் பென்டிரைவ் ஒன்றில் காப்பிசெய்து அதை அந்த டிவிடி பிளயரில் செருகி பார்க்கலாம் என்பது தான் அதன் விசேசம். வீணாக சிடி அல்லது டிவிடிக்களை எரிக்க வேண்டியதில்லை. எரித்தும் என்ன பிரயோஜம். சீக்கிரத்தில் கிறுக்கல் விழுந்து விடுகின்றது. அல்லது அழுக்கு பிடித்து விடுகின்றது. இந்தியாவில் ஓனிடாக்காரர்கள் “உங்களை பார்த்துதான் டிசைன் செய்தோம்” என்ற கோஷ வரிசையில் இந்த வசதிகொண்ட டிவிடி பிளையரை வெளியிட்டிருக்கின்றார்கள். சன் டிவியில் பார்த்த நியாபகம். விலை கொஞ்சம் எகிறுமாயிருக்கும். Jpg படங்கள், Mpeg வீடியோக்களையெல்லாம் USB பென்டிரைவில் காப்பிசெய்து அதை அப்படியே தனது HDTV யில் ஓட்டி காட்டினான். நன்றாக இருந்தது. இந்த மாதிரியான டிவிடி பிளயர்களை HDTV-யோடு இணைக்க HDMI எனும் கேபிளை பயன்படுத்தலாம். மற்ற கலர் கலரான நீலம்,பச்சை,சிவப்பு component வீடியோ கேபிள்களை பயன்படுத்தினால் பல கேபிள்களை ஆடியோ வீடியோக்குவென பயன்படுத்த வேண்டியிருக்கும். தரமும் கம்மியாக இருக்கும். இதுவே HDMI கேபிள் ஒரே கேபிளாக இருப்பதோடு தரமும் நன்றாக இருக்குமாம். அமேசானில் ஆறடி HDMI கேபிள் மூன்று டாலருக்கு கிடைக்கின்றது. தனது வீடியோக்களையெல்லாம் சேமித்துவைத்து இப்படி அப்பப்போ வசதியாக தனது டிவியில் பார்க்க Western digital Passport 500GB நல்ல டீலில் கிடைக்குமாவென தேடிக்கொண்டிருக்கின்றான்.100 டாலர்கிட்ட ஆகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு 1GB = 1 டாலர் விகிதத்திலிருந்த ஹார்டிரைவின் விலை இன்றைக்கு 1GB=0.20 டாலராகியிருக்கின்றது நல்ல சேதி. எக்ஸ்ராவாய் ஒரு பவர் அடாப்டரை தூக்கிக்கொண்டு சுத்தாமால் கூடவரும் USB கேபிளே தேவையான பவரை டிரைவுக்கு கொடுத்தால் போர்ட்டபிளாக சட்டைப் பையில் வைத்துக்கொண்டு சுற்றலாம். அதுதான் வெஸ்ட்ரன் டிஜிட்டல் பாஸ்போட்டின் அருமை. இந்த டிவிடி பிளயர்களில் இப்போதிருக்கும் ஒரே குறை NTFS file system வேலைசெய்வதில்லை. FAT32 file system-த்தில் மட்டுமே அந்த USB டிரைவ் ஃபார்மேட்செய்யப்பட்டிருக்கவேண்டும். உங்கள் விண்டோஸ் ஒருவேளை 500gb டிரைவை FAT32-வில் ஃபார்மேட் செய்யவிடாமல் அடம்பிடித்தால் உங்களுக்கு fat32format எனும் இந்த சின்ன மென்பொருள் உதவலாம்.
சிந்திக்காதவன் முட்டாள்





